Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

இன்று இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளிடையோன டி-20 தொடர் ஆரம்பம்….

ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் இன்று நடப்பு டி-20 உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது. அதன்படி தொடரின் முதல் போட்டியானது இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 1.40 மணிக்கு சிட்டினியில் ஆரம்பமாகிறது.

கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு இரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இந்த ஆட்டம் அமையும். உலகக் கிண்ண போட்டியில் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிய போது அவுஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.

அவுஸ்திரேலியாவில் இதுவரை விளையாடிய டி-20 போட்டிகளில் இலங்கை அணி 5 வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைவெளி இலங்கை அணிக்கு இன்றைய போட்டியில் ஆறுதல் அளிக்கும்.

Related posts

Leave a Comment