Latest | சமீபத்தியது உள்நாடு 

இலகு புகையிரத திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கான உதவிகளை ஜப்பான் குறைத்துள்ளதாக தகவல்…..

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதனை ஜப்பானிய அரசாங்கம் குறைத்துக் கொண்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2020ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய மொத்த உதவிகள் 94 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு 42.7 பில்லியன் யென் உதவி வழங்கிய ஜப்பான் அரசாங்கம் 2020ஆம் ஆண்டில் இந்த தொகையை 1.4 பில்லியன் யென்களாக குறைத்து கொண்டுள்ளது. ஜப்பானின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவிருந்த இலகு புகையிரத திட்டத்தை தற்போதைய அரசாங்கம் ரத்து செய்ததனை தொடர்ந்து இவ்வாறு உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

Leave a Comment