உள்நாடு 

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமது பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்ததாகவும், இந்த விஜயம் தொடர்பில் நிறைவேற்று சபை கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கோரிக்கை விடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனவும், இலங்கையின் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment