உள்நாடு 

தமிழ் பெண்களின் ஆடைகளை விமர்சித்துள்ள முபாரக் அப்துல் மஜீத்!

தமிழ் பெண்களின் ஆடைகளை மிகவும் மோசமான முறையில் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விமர்சித்துள்ளமையானது மக்கள் மத்தியில் கடும் விசமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

கல்முனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது கருத்து வெளியிட்டிருந்த முபாரக் அப்துல் மஜீத், “இப்பொழுது சேலை என்பது இரண்டு துணியாக மாறிவிட்டது. பின்னால் ஜன்னல் வைத்து கொள்கின்றார்கள். முன்னால் வீ வடிவில் வெட்டி விடுகின்றார்கள். இடுப்பினை காட்டுகின்ற சேலை வரை நாம் காண்கின்றோம்.

ஆகவே இப்பொழுது இருக்கின்ற சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை. சேலை அணியத்தான் வேண்டும்.சே லை என்பது எத்தனை முழம் என்பது எமக்கு தெரியும்.

முன்னைய கால நாடகங்கள் நாவல்களில்  சேலையுடன் வருகின்ற பெண்கள் விழுமியங்களை பாதுகாப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் தற்போது உள்ள சேலை ஒழுக்கமில்லாதது.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா சர்ச்சையினை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முனையும் இந்த சூழலில் தமிழ் பெண்களின் ஆடைகளை மிகவும் மோசமான முறையில் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விமர்சித்துள்ளமையானது மக்கள் மத்தியில் கடும் விசமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

அவரின் குறித்த கருத்தானது தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்தாகவே அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மௌலவி முபாரக் அப்துல் மஜீத் இதற்கு முன்னரும் இவ்வாறான பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இலங்கையின் பூர்வீக குடிகள் முஸ்லீம் என தெரிவித்து கடந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment