Latest | சமீபத்தியது மலையகம் 

திலகரின் அரசியல் நகர்வுக்கு இ.தொ.காவும் ஆதரவு!

மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு கோரிய நியாயப் பிரசாரத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு அமைப்பாளர் க. பத்மநாதன் உள்ளிட்ட குழுவினர் தமது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து க. பத்மநாதன் விடுத்திருக்கும் செய்தியை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“திலகர் அவர்களின் திறமையை பலர் அறியவில்லை அவர் அரசியல்லாபம் தேடும் ஒருவருமல்ல மடக்கொம்பரை மண்ணின்மைந்தர் பாராளுமளறத்தில் எமதுவரலாற்றை அலசி ஆராய்ந்து நுவரெலிய மஸ்கெலிய தேர்தல தொகுதிக்கு எத்தனை பிரதேச சபைக்குறிய எத்தனை சபைகள் இருக்க வேண்டும் என சரியாக வரையறுத்தியவரை தொடர்ந்தும பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒருவரை இழந்துவிட்டது நமது சமூகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை எவராலும் மறுக்கமுடியாது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருவரிடம் உள்ள திறமைையை எமது மக்கள் நல்வவாழ்விற்கு பயன் படுத்திக்கொள்வதில் தவறே கிடையாது எதிரகாலத்திலாவது இப்படியான தவற்றினை சம்பந்தப்பட்ட அரசியல வாதிகள் திருத்திக்கொள்வது நன்மையானதாக இருக்கும்”

திலகரன் இல்லத்தில் நடந்த சந்திப்பில் இதொகா கொழும்பு அமைப்பாளர் க. பத்மநாதன்
முன்னாள் பொதுச் செயலாளர் ( அமர்ர் ) எம். எஸ். செல்லச்சாமியின் மகன் திருக்கேஷ் செல்லச்சாமி, சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தமது ஆதரவை வழங்கி உள்ளனர்.

Related posts

Leave a Comment