உள்நாடு 

நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைய சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என நம்பிக்கை!

நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைய சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதைத் தவிர சுகாதார அமைச்சு அமைதியாக இருக்கத் தயாராக இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து தமது தரப்புக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது அரசியலமைப்பின் உரிமை எனவும், தமது தொழிற்சங்கம் சட்டவிரோதமான எதனையும் செய்யவில்லை எனவும் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment