உள்நாடு 

1408 ரூபா களவாடிய பொலிஸ் கான்ஸ்டபள் கைது

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை களவாடிய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ ரத்தாவத்த பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது. ராஜதந்திர பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்கொடை உண்டியலை உடைத்து பணம் களவாடிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பல்பொருள் அங்காடியின் பணியாளர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிரேஸ்ட பிரஜைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நன்கொடை உண்டியலிலிருந்து குறித்த நபர் பணத்தை களவாடியுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

Leave a Comment