உள்நாடு மலையகம் 

15 கிலோ கோதுமை மா ; அரசாங்கத்தின் உறுதி இன்னமும் நிறைவேற்றடவில்லை!

  • ஜீவன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் –

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்குவது தொடர்பான பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடல் இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர்களுக்கிடையிலே இவ் ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா வீதம் 15 கிலோ கோதுமை மாவினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் இவ் திட்டத்தை விரைவாகவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர்கள்,அதிகாரிகள் பிரீமா,செரன்டிப் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டர்.

Related posts

Leave a Comment