உள்நாடு 

இன்று முதல் சஹ்ரானின் மனைவியிடம் விசாரணை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் இன்று முதல் குற்றப்புலனாய்வு பிரிவினூடாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ,இதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினூடாக இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

Related posts

Leave a Comment