உள்நாடு 

6 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு…

பல்வேறு சுகாதார தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(12) 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தங்களது கேரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

தாதியர் சங்கம் , நிறைவுகாண் மருத்துவ சங்கம், மேலதிக மருத்துவ சேவைகள் சங்கம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 17 சுகாதார தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

அதன் காரணமாக சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்

மேலும் இதேவேளை, உடனடியாக பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துமாறு நேற்று முன்தினம் (10) கொழும்பு மாவட்ட நீதிபதியால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment