Latest | சமீபத்தியது உள்நாடு 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை விரைவில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் இந்த விலையுயர்வு அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் செயற்படும் இந்திய நிறுவனமான லங்கா ஐஓசி தமது பெற்றோல் மற்றும் டீசல்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இதனைடுத்து அதற்கு சமமாக தமது பெற்றோலியப் பொருட்களின் விலையை உயர்த்தவேண்டும் என்று இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம், நிதியமைச்சிடம் கோரியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால், இந்திய எரிபொருள் நிறுவனம் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்யும் விலையிலும் பார்க்க அதிக விலையுயர்வை நிர்ணயிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், இந்திய எரிபொருள் நிறுவனம், தமது பெற்றோல் ஒக்டெய்ன் 92 லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவாலும், 95 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவாலும், டீசலை 3 ரூபாவாலும் உயர்த்தியது. இந்தநிலையில், எரிபொருள் விலையை, இந்திய நிறுவனத்தைக் காட்டிலும் தாம் குறைத்து மானிய விலையில் வழங்குவதாலும், இந்திய நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தமது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையத்தை நோக்கி வருவதன் காரணமாகவும் தமக்கு நட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமது நிறுவனம் 6 முதல் 8 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மின்சக்தி அமைச்சின் ஊடாக, சீனா, சிங்கப்பூர் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடனை பெற்றோலியக்கூட்டுத்தாபன தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Related posts

Leave a Comment