Latest | சமீபத்தியது உள்நாடு 

கொழும்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டை….

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கு கோரும் கையெழுத்துப் போராட்டம் நாளை மறுதினம் கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் எனது தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடுரூபவ் கிழக்கு மாகாணத்திற்கும் நகர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து இந்தக் கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்காலத்தின் நன்மை கருதி அனைத்து தரப்பினரும் பங்கேற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

Leave a Comment