Entertainment | பொழுதுபோக்கு, Latest | சமீபத்தியது சினிமா 

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் 6 மாஸ் ஹீரோக்கள்… முதலிடம் யாருக்கு???

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களின் முந்தைய படம் அதிக வசூல் சாதனை படைத்தால் அடுத்த படத்திலேயே சம்பளத்தில் அதிகமாக கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர்களுக்கும் மார்க்கெட் அதிகமாகிறது. அந்த வகையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் 5 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் முதலிடத்தில் உள்ளார். இவருடைய எந்திரன், 2.0, கபாலி படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ரஜினி இந்திய மதிப்பில் 110 கோடியிலிருந்து 115 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெறுகிறார்.

விஜய் :

ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக வசூல் சாதனை படைப்பது விஜய்யின் படங்கள் தான். இவருடைய தெறி, பிகில், மாஸ்டர் போன்ற படங்களின் தொடர் வெற்றியால் இவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஒரு படத்திற்கு 100 கோடியில் இருந்து 110 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

அஜித் :

நடிகர் அஜித்தின் படங்கள் ரசிகர்களால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் பில்லா படத்தில் தொடங்கி அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் அஜித். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் விஜய் போல மற்ற மாநிலங்களில் அஜித்தால் மார்க்கெட்டை பெற முடியவில்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் போனி கபூர் உடன் மீண்டும் ஒரு படம் என மூன்று படத்திற்கும் அஜித்தை 200 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துள்ளார் போனி கபூர்.

கமலஹாசன் :

கமலஹாசனின் பெரும்பாலான படங்கள் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைகிறது. சொல்லப்போனால் மற்ற மொழி படங்களில் நடித்ததற்காக விருது வாங்கியவர் கமலஹாசன் தான். தற்போது இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல் ஒரு படத்திற்கு 30 கோடியில் இருந்து 55 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

சூர்யா :

விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. அவருடைய சூரரைப்போற்று படம் மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது. சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா தன் நடிக்கும் ஒரு படத்திற்கு 35 கோடியில் இருந்து 45 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

தனுஷ் :

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தனுஷ். இவர் பெரும்பாலான படங்களை தன் தயாரிப்பு நிறுவனம் மூலமாகவே தயாரிக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தனுஷ் ஒரு படத்திற்கு 20 கோடியில் இருந்து 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Related posts

Leave a Comment