உள்நாடு 

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம்!

தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment