உள்நாடு 

பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக நீதிமன்றத் தீர்ப்பை நாடியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்தூவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Related posts

Leave a Comment