Latest | சமீபத்தியது World | உலகம் 

பாகிஸ்தானில் மீண்டும் கல்லால் அடித்து ஒருவர் கொடூரமாக கொலை……

பாகிஸ்தானில் மனநலம் குன்றிய ஒருவரை கும்பலொன்று கல்லால் அடித்துக்கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் டெராவாலா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று நபரொருவர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதுடன்,உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர்.

குறித்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு பொலிஸார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது எனவும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment