உள்நாடு 

போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் காதலர் தின கொண்டாட்டம் – இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் சொகுசு வாகனங்களில் வந்தே மேற்படி விருந்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சில் 21 முதல் 24 வயதுடைய நான்கு யுவதிகளும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது. இவர்கள் அநாகரியமான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment