உள்நாடு 

மேல் மாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை….

இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோத விருந்துகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 1,505 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) காலை 08 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment