உள்நாடு 

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது

நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மாற்றமே நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

எனவே நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது இது தொடர்பான திருத்தங்கள் நிதி அமைச்சினால் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment