உள்நாடு 

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு…

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ,ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

அந்தநிலையில், 40 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர் என்றும் அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர் என்றும் உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாக துருக்கி – அன்காராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் ,வெளிவிவகார அமைச்சின் தகவல்களுக்கு அமைய உக்ரைனில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் உடனடியாக அங்குள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment