உள்நாடு 

காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி…

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்‍ணொருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வேனென்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரியான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வேன்சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சாரதியை கைதுசெய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment