உள்நாடு 

சிறுமி மீது துப்பாக்கிச்சூடு – இளைஞரொருவர் கைது

ஹப்புத்தளை – கொஸ்லாந்தை – கெலிப்பனவளை பகுதியில் 12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் குறித்த சிறுமி சுடப்பட்டதோடு, கொஸ்லாந்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment