Latest | சமீபத்தியது உள்நாடு 

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு மன்னார் பொலிஸார் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றையதினம் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment