பசறை டெமேரியா பி தோட்ட கமேவெல பிரிவில்
தோட்ட காணியை அபகரிக்க முயற்சி!
பசறை டெமேரியா பி தோட்ட கமேவெல பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்கள் ஆக்கிரமித்தமை தொடர்பாகவும் தற்காலிக குடிசை அமைத்துள்ளமைதொடர்பாக டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது காணி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கிடையே முறுகல்நிலை ஏற்பட்டது. பதற்றநிலையறிந்து இ.தொ.கா வின் பசறை பிரதேச சபை உறுப்பினர் வேலு ரவி , அமைப்பாளர் எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றதோடு இச்சம்பவம் தொடர்பாக இ.தொ.கா வின் உப தலைவரும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமாகிய செந்தில் தொண்டமானின் கவனத்திற்கொண்டு சென்றனர்.
இவ்விடயம் தொடர்பாக உடனடியாக பதுளை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக உரையாடியதோடு காணி ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். குறித்த சம்பவம் தொடர்பில் டெமேரியா தோட்ட முகாமையாளரால் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு
தோட்ட காணியைஆக்கிரமித்த நபர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(