Latest | சமீபத்தியது உள்நாடு 

பாதாள குழு உறுப்பினரான “பரிப்புவா” கைது!

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் மற்றும் போதைப்பொருள் வியாபாரியுமான “பரிப்புவா” என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க என்பவர் விசேட அதரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இதன்படி ,விசேட அதிரடிப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (14) இரவு கோன்கடவல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இவரை கைதுசெய்வதற்கு இதற்கு முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிற்பபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தேகநபரிடமிருந்து “TYPE82” வகையைச் சேர்ந்த கைகுண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அம்பன்பொல பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

Related posts

Leave a Comment