உள்நாடு 

மூன்று மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது – முக்கிய அறிவிப்பு

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய முறையானது எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அனுமதிக்காது என அதன் தலைவர், ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை முதல் ஹைட்ரோ மின் உற்பத்தி 50% குறைக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள டொலர் நெருக்கடி காரணமாக மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இலங்கை மின்சார உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment