இரு பிள்ளைகளின் தாய் சுட்டு கொலை….
மத்துகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (15) 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
வீட்டிற்குள் நுழைந்த இருவர், பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். T 56 ரக துப்பாக்கியின் 6 ரவைகள், சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.