உள்நாடு 

கழிப்பறைக்குள் சிக்கிய ரகசிய கமரா – கம்பஹா மேலதிக வகுப்பு நிலையத்தில் கண்டுபிடிப்பு

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை, தனது மகள் உட்பட மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். இவ்வாறான மோசமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி இருக்கலாம் என மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment