சுகாதாரத்துறையினரின் போராட்டங்கள் கைவிடப்பட்டதை தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தீவிரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினரின் போராட்டங்கள் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றையதினம் விசேட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெருமளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்குத் தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை தந்ததைக் காணமுடிந்தது.
மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் செல்வநாயகம் மண்டபம் ஆகியவற்றில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மூன்றாவது, இரண்டாவது, முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவருக்குமாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான் தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மூன்றாவது தடுப்பூசி பெற்றுக்கொள்வது இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் படையினர் சோதனைகளை நடாத்தி மூன்றாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.