உள்நாடு 

மத்துகமவில் துப்பாக்கிச்சூடு – இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மத்துகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இருவர், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதான பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment