Latest | சமீபத்தியது உள்நாடு 

மருந்து, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இந்தியா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்தியாவினால் நன்கொடையாக 100 000 அன்டிஜன் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 110 மில்லியன் ரூபா பெறுமதியுடைய அன்டின் உபகரணங்கள் இவ்வாறு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இதனை கையளித்தார்.

தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்க எதிர்பார்த்துள்ளதோடு , இதற்காக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் , இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது.

மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்களில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வரும் உதவிகளுக்கு அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment