Latest | சமீபத்தியது உள்நாடு 

கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்…..

உப்புவெலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவௌி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள கடற்கரையில் நீராட சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

21 வயதுடைய தலாதுஓய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் இரண்டு நண்பர்கள் அவரை காப்பாற்ற முற்பட்ட போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து உயிர் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் உடன் செயற்பட்ட இருவரை காப்பாற்றியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

Related posts

Leave a Comment