Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை!

-மருத்துவர் பிரியங்கர ஜயவர்தன-

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களையும் அவர்களின் கருவிலுள்ள குழந்தைகளையும் பாதுகாக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இத்தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண் களுக்கு பூஸ்டர் தடுப்பூசி உட்பட முழுமையாக தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். கடந்த காலங்களில் நாம் பார்த்தது என்னவென்றால், முழுமையான தடுப்பூசி அதாவது பூஸ்டர் தடுப்பூசி, கொவிட் நோய் பாதிப்பின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்தவில்லை.

இந்தத் தடுப்பூசி மூலம் கூட, ஒரு நபர் இன்னும் நோயைப் பெறலாம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அது சிக்கல்களை ஏற்படுத்தவில்லை என்றால் அது பற்றி நாம் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டியதில்லை. கர்ப்பம் ஒரு சிறந்த காலம். அந்த நேரத்தில் தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்புக்கு முழு தடுப்பூசியும் முக்கியம்.” என்றார்.

Related posts

Leave a Comment