Latest | சமீபத்தியது உள்நாடு 

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரஞ்சன்….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு இன்று (17) காலை அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அந்த அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment