பிரேதப் பரிசோதனைக்கு பிசிஆர் சோதனை கட்டாயமில்லை!
மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் போது பிசிஆர் கட்டாயமில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆலோசகரான வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனை பிசிஆர் செய்வதன் விளைவாக இறந்தவர்களின் உறவினர்கள் எதிர்கொண்ட சிரமங்களைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 15ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி நேற்று முதல் அனைத்து மரணங்களுக்கும் பிரேதப் பரிசோதனையின் போது பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக் கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் பிரேதப் பரிசோதனையின் போது பிசிஆர் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.