உள்நாடு 

பேராயர் மெல்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு…

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையொப்பம் பெறும் மனுவுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையொப்பமிட்டுள்ளாா்.

இதன்படி ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் மற்றும் அரசியல் சகதிகளின் உதவியுடன் இந்த மனுவுக்கு கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பு மாவட்டத்திலும் இந்த மனுவுக்கு கையொப்பம் பெறும் நடவடிக்கை கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகின்றது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பேராயரை சந்தித்து இந்த மனுவை ஒப்படைத்துள்ளாா்.

Related posts

Leave a Comment