Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ராஜிகா உட்பட 53 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க கொவிட் வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார்.

கொவிட் பரிசோதனையில் சில சிறிய அறிகுறிகளுக்குப் பிறகு அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டி ருப்பதாகவும், அவருக்கு தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட குறித்த எம்.பி., கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

இதனால், கொவிட் பாதித்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment