உள்நாடு 

ஹொரனையில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை கடத்தல்……

ஹொரனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 7.30 க்கும் 8 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கடத்தல் குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் மேற்கொள்ளப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், குடும்ப தகராறு தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

Leave a Comment