இலத்திரனியல் கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள சடுதியான உயர்வு….
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இலத்திரனியல் வாகனங்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை அதிகளவில் ஆதரித்து வரும் நிலையில் இலத்திரனியல் கார் விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக இலத்திரனியல் கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது.
2021ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 65 லட்சம் இலத்திரனியல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் முழு இலத்திரனியல் கார் மற்றும் ஹைபிரிட் கார்களும் அடக்கம். 2020ஆம் ஆண்டுடன் விற்பனையை ஒப்பிடுகையில் 2021இல் இலத்திரனியல் கார் விற்பனை சுமார் 109 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், உலகளவில் இலத்திரனியல் கார் விற்பனையில் டெஸ்லா நிறுவனம் மட்டும் சுமார் 14 சதவீத வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றியுள்ளது. 2021ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த இலத்திரனியல் கார்களில் 85 சதவீத இலத்திரனியல் கார்கள் சீனா மற்றும் ஐரோப்பியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாகச் சீனா, கொரியா, ஜப்பான் நாட்டின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் இலத்திரனியல் கார்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளதாலும், டெஸ்லா கார்களின் விலை சற்று அதிகமாக உள்ளதாலும் இதன் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்க முடியாமல் உள்ளது.
கோவிட் தொற்று, சிப் தட்டுப்பாடு 2021ஆம் ஆண்டில் மொத்த கார் விற்பனை சந்தை வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் இலத்திரனியல் கார் விற்பனை 109 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டில் கோவிட் தொற்று, சிப் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் கார் உற்பத்தியும் தொய்வு அடைந்துள்ளது, அதேபோல் விற்பனையும் சரிந்துள்ளது. சீனாவில் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 32 லட்சம் இலத்திரனியல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு உள்ள மொத்த இலத்திரனியல் கார்களில் 50 சதவீதமாகும்.
2020ல் சீனாவில் 20 லட்சம் இலத்திரனியல் கார்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் டெஸ்லா மாடல் 3 கார் 2021ஆம் ஆண்டின் best-selling electric car எனப் பெயர் எடுத்தாலும் வோக்ஸ்வாகன் குழுமம் நிறுவனங்கள் தயாரிக்கும் இலத்திரனியல் கார்கள் ஆதிக்கம் செலுத்துகிறன.
வோக்ஸ்வாகன், ஆடி, ஸ்கோடா ஆகியவை தனித்தனியே இலத்திரனியல் கார்களைத் தயாரிக்கிறது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதிகளவிலான இலத்திரனியல் கார்களை விற்பனை செய்யும் டாடா மோட்டார்ஸ் 2021ஆம் நிதியாண்டில் வெறும் 1300 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் 2022ஆம் நிதியாண்டில் 17,000 முதல் 18000 கார்களை விற்பனை செய்யும் எனக் கணித்துள்ளது. டிசம்பர் 2021ல் டாடா சுமார் 2,255 இலத்திரனியல் கார்களை விற்பனை செய்துள்ளது.