உள்நாடு 

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Related posts

Leave a Comment