Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

ஆறு இந்திய மீனவர்களுக்கு மார்ச் மாதம் 4 வரை விளக்கமறியல்….

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment