Latest | சமீபத்தியது மலையகம் 

கொட்டகலையில் பொலிஸ் – பொது மக்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்!

கொட்டகலை, குடாஒய,கிராம அதிகார பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பொது மக்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இன்றைய தினம்(19) கொட்டகலை சித்திவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாடசாலையில் இடை விழகிய மாணவர்கள்,நகர மலசல கழிவுகள் ,நீர் ,போதைபொருள் பாவனை, போன்றபல பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிசெயலாளரும் கொட்டகலை நகர வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விசுவநாதன்,திம்புள்ள பத்தனை பொலிஸ்நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் D.M ஆனந்தஸ்ரீ,கிராமஅதிகாரிகள் முருகானந்தன்,கிருஷ்ணராஜ் , பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நகரவர்த்தகர்கள்,சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,மதகுருமார்கள்,கலந்துகொண்டனர்.

(

Related posts

Leave a Comment