பிரேசிலில் நிலச்சரிவில் 116 பேர் மாயம்…..
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கார்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்துள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களை மீட்கும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்க்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று வரையில் 117 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 116 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு நடந்து 3 நாட்களாகி விட்டதால், இவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.