உள்நாடு 

போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி

கல்முனை தரவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார்சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய சொகுசு வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதி கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார், சொகுசு வாகனம் ஒன்றை நிறுத்த முற்பட்டபோது போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார்சைக்கிளில் மோதிவிட்டு தப்பிச் சென்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாகனத்தை விட்டுவிட்டு அதன் சாரதி தப்பி ஓடிய நிலையில் குறித்த வாகனத்தை பொலிஸார்  மீட்டுள்ளனர். 

இதனையடுத்து  வாகனத்தை பொலிஸார் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் வாகனத்தை செலுத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

Leave a Comment