Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

யாழில் நகைகளை கொள்ளையிட்ட மூவர் கைது….

யாழ். பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் கடந்த மாதம் 31 ஆம் திகதி 23 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கநகைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நகைகளை கொள்ளையிட்ட சந்தேகநபர் ஒருவரும், அவற்றை அடகு வைத்த சந்தேகநபர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்துள்ளனர். அத்தோடு கொள்ளையிடப்பட்ட நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகைகளில் பொன்தாலிக்கொடியொன்றுடன் 4 தங்கசங்கிலிகள், 6 தங்கமோதிரங்கள், 5 தங்ககாதணிகள், 2 தங்கவளையல்கள், 2 தங்கநாணயங்கள், 2 தங்கபதக்கங்கள், 1 பஞ்சாயுதம் மற்றும் 2 தங்கமுலாம் என்பவை அடங்குகிறது. இவற்றை அடகுவைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 25, 27 வயதான வேலணை மற்றும் சுன்னாகம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment