உள்நாடு 

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் செலுத்தப்படும் சில கொரோனா தடுப்பூசிகள் சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு நான்காவது தடுப்பூசி டோஸை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சில நாடுகள் சினோபாம் தடுப்பூசியை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சினோபாம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்று, பைஸர் பூஸ்டர் டோஸை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு, அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க உதவும் வகையில் தடுப்பூசியின் மற்றுமொரு டோஸை நாங்கள் வழங்குவோம்.

பல்வேறு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகள் மற்றும் அங்கு பயணிக்கத் தேவையான தடுப்பூசிகள் குறித்து வெளிவிவகார அமைச்சு சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கும்.

ஒருவர் வெளிநாடு செல்ல நான்காவது டோஸ் தேவைப்பட்டால், பயணத்துக்குத் தேவையான ஆதாரமும் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment