Latest | சமீபத்தியது உள்நாடு 

இரண்டு வாரத்தில் இந்தியாவிடமிருந்து பொருளாதார நிவாரணப் பொதி…..

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க “அவசரமாக” உதவுவதற்காக இந்தியாவிடமிருந்து பொருளாதார நிவாரணப் பொதி 2022 மார்ச் 1 ஆம் திகதிக்குள் கிடைத்துவிடுமென திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கொழும்பு ஆங்கில ஊடமொன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பொருளாதார நிவாரணப் பொதியில் வெளிநாட்டு இருப்புக்கள், பெற்றோலியம் இறக்குமதிகள், மற்றும் மிகவும் தேவைப்படும் நிதி உதவி சுமார் $900 மில்லியன் ஆகியவை அடங்கும். “அவர்கள் (இந்தியா) அவர்களின் பாதுகாப்பு அனுமதிகள், அமைச்சரவை அனுமதிகள் போன்றவற்றை இதற்காக பெற வேண்டும். அந்த இடங்களில் அனுமதி கிடைத்தவுடன், அதிகாரத்துவம் செயல்பட வேண்டும்” என்று ஆட்டிகல கூறினார்.

எனினும், பொதியின் பெறுமதி அல்லது உதவிப் பொதியில் வேறு என்ன உள்ளடங்கியிருக்கும் என்று கேட்டபோது, ​​இந்திய அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்காததால், அவற்றில் என்ன உள்ளது என்ற விபரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

Related posts

Leave a Comment