அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் ஏற்படுமா??
அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.