Latest | சமீபத்தியது உள்நாடு 

ஜனாதிபதி மற்றும் ஆளும் கூட்டணியின் பங்காளிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை……

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போதே இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் முரண்பட்டதாகவே காணப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெறும் கூட்டம் கடந்த ஒருவருட காலமாக இடம்பெறவில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இந் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதி வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினோம்.

அதன்படியே எதிர்வரும் வாரம் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என்றும் கூறினார்.

Related posts

Leave a Comment