ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு 49ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
49வது அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின்போது ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான எழுத்துமூலமான அறிக்கையை சபையில் முன்வைப்பார்.
அதனைத்தொடர்ந்து, மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.